சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் இன்று பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் தான் அண்ணாமலை தலைமையில் இன்று கமலாலயத்தில் காலை சரியாக 10 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. அண்ணாமலை இன்னும் டெல்லியில் இருந்து திருபாத நிலையில்,  இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் இன்று காலை 10 மணி அளவில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் மிக முக்கிய உயர் அதிகாரம் கொண்ட பெரும் கோட்டபொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன்,  வினோத் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.