
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் இருவர் பிறந்த நாள் பார்ட்டி என்று ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளனர். சிறுமியும் நண்பர்கள் தானே என்று நம்பி அவர்கள் அழைத்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கேக் என்று சிறுவர்கள் மயக்க மருந்து கலந்த கேக்கை சிறுமிக்கு கொடுத்துள்ளனர்.
இதனால் சுயநினைவை இழந்த சிறுமியை இரண்டு சிறுவர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனது குடும்பத்தினரிடம் விவரத்தை தெரிவிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.