
மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவரான பில் கேட்ஸ் இந்திய கிரிக்கெட் துறையின் தொன்மையான நட்சத்திரம் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருடன் சந்தித்த ஒரு இனிமையான தருணத்தை இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய இனிமையான தருணங்களை பரிமாறிக் கொண்டனர்.
அவர்கள் இருவரும் மும்பையின் புகழ்பெற்ற தெரு உணவான வடப்பாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு இவர்கள் சாப்பிட்டுக் கொண்டே சிரித்தபடி பேசும் காட்சியை பில்கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் “வேலையை தொடங்குவதற்கு முன் ஒரு சிறிய ஸ்நாக்ஸ் பிரேக்” என்ற பதிப்புடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்தியா மீதான பில்கேட்ஸ்ன் பாசத்தையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்துகிறது என கூறப்படுகிறது. மேலும் இந்திய மக்கள் சிக்கலான பிரச்சனைகளையும் புத்திசாலித்தனமாக சமாளிக்கிறார்கள் எனவும் பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க