செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 1996-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் வேந்தர் நியமனம் குறித்து கொண்டு வந்து சட்டம் மசோதாவுக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு….  மாண்புமிகு அமைச்சர் அன்பழகன் சொன்ன கருத்து இது.

அதற்குப் பிறகு திமுக தலைவர் திரு. கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதி என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நான்காம் பாகம் … அதில் 511வது பக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தலைவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதையும் நான் சுட்டிக்காட்டுகின்றேன்

1994ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் அப்போது இருந்த 13 பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு  ஆளுநரிடம் இருந்ததை மாற்றி, முதல்வர் தான் பல்கலைக்கழக வேந்தர் என்ற சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். பேரவையில் சட்ட நிறைவேற்றப்பட்ட போதிலும்…. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா ? என்ற கேள்விக்குறி அப்போது பெரிதாக எழுந்தது.

ஏனென்றால் ஆந்திராவில் என்.டி ராமராவ் அவர்கள் முதல்வராக இருந்தபோது….  இதுபோன்ற ஒரு சட்டத்தை அங்கே நிறைவேற்றினார். ஆனால் அதற்கு அந்த மாநில ஆளுநராக  பொறுப்பேற்ற சென்னா ரெட்டி அவர்கள் அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு,  ஆளுநரே வேந்தராக நீடிக்க வகை  செய்தார்.  எனவே அவர் தமிழகத்தின் ஆளுநராக இருந்து,  இந்த சட்டத்திற்கு ஒப்புதல் தருவாரா ? என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால்,  அந்த காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே…  அப்போது யார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் திமுக கழகத்தின் சார்பில் அந்த சட்டம் தேவையற்றது என்ற கருத்தை தெரிவிக்கப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு……  மாண்புமிகு அம்மா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்….  வேந்தர் நியமனம் குறித்து சட்ட முன்வடிவு வந்தபோது அதற்கு இப்படிப்பட்ட கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆகவே  திமுகவை பொறுத்த வரைக்கும்…. ஆளுகின்ற ஆட்சி இருக்கின்ற போது ஒரு நிலைப்பாடு…. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு….  இரட்டை வேடம் போடுகின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான்.

அன்றைக்கே அண்ணா திமுக கொண்டு வந்த அந்த சட்ட முன்வடிவை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றப்பட்டிருந்தால்,  உண்மையிலேயே இப்பொழுது இந்த பிரச்சனை இருந்திருக்காது. ஆகவே 29 ஆண்டுகளுக்கு முன்பாகவே… மாண்புமிகு அம்மா அவர்கள் வேந்தர் நியமனம் குறித்து சட்டம் முன்வடிவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.

அது நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதான் நடந்தது. அது மட்டும் இல்லை இப்போது இருக்கின்ற பிரச்சனையே என்ன ? சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர் பேசினார். கருத்தை சொல்லுகின்ற போது சொன்னார்… வேந்தர் நியமனம் குறித்து அந்தந்த மாநில அரசாங்கம் யாரை சிபாரிசு செய்கிறதோ, அவர்களை துணை வேந்தராக  போடுவது தான் மேதகு ஆளுநர் உடைய கடமையாக இருந்திருக்கிறது.

சமீப காலமாக மாநில அரசு சொல்லுகின்ற…. சிபாரிசை செய்கின்ற பெயரை அவர்கள் துணை வேந்தராக நியமனம் செய்வதில்லை என்று சட்டமன்ற கூட்டத்திலே பேசி இருக்கின்றார். அப்படி என்றால் ஆளுநருக்கும்,  திமுக அரசுக்கும்…  திமுக முதலமைச்சருக்கும் இருக்கின்ற கருத்து வேறுபாடு காரணமாகத்தான் இந்த சட்டமுன்வடிவை  கொண்டு வந்திருக்கிறார்கள் என்று  பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.