
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒரு பெண் ஸ்கூட்டியில் வேகமாக செல்கிறார். அப்போது அந்தப் பெண் வலது புற இண்டிகேட்டரை ஆன் செய்துவிட்டு இடது புறமாக செல்கிறார். போக்குவரத்து விதிமீறல் செயலால், தவறுதலாகும் ஒரு பைக்கின் மீது உராய்ந்து கீழே விழுகிறார்.
அத்துடன் அந்தப் பெண் தன் மீது தவறு இல்லை என்று அந்த வாகன ஓட்டியுடன் விவாதம் செய்து சண்டை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு பின்னால் பைக்கில் வந்த ஒருவர் தனது ஹெல்மெட்டில் அமைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னால் வந்த நபர் இளம் பெண்ணின்மீது தான் தவறு என்று கூறும் பட்சத்தில் மற்ற நபர்கள் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகவே திரண்டு வருகின்றனர்.
விவாதம் முற்றிய நிலையில் இளம் பெண், ரைடர் பைக் சாவியையும் அந்தப் பெண் பிடுங்கி விவாதம் செய்கிறார்.. அதிர்ச்சியூட்டும் வகையில், சவாரி செய்பவர்களில் ஒருவர் அவரது செயல்களை ஆதரிக்கிறார், இறுதியில் அந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்தப் பெண் மீதுதான் தவறு எந்த உறுதியாக செய்யப்படுகிறது.
View this post on Instagram
“>
இருப்பினும், இறுதியில் தான் தெரியவந்தது , முழு சம்பவம் ஒரு ஸ்கிரிப்ட் குறும்பு என்று தெரியவந்தது. அந்த பெண், பைக் ரைடருடன் சேர்ந்து படம்பிடித்து, அதே குழுவினரை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் முட்டாளாக்கியுள்ளனர். தற்போதைய சுழலில் இதுபோன்று தான் சிறிய விபத்து பெரிய கைகலப்பில் முடிகிறது என்று சோசியல் எஸ்பிரிமெண்ட் நமக்கு விளக்குகிறது.