
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாக்ஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரை. கூத்து கட்டும் பிரபலமாக நுழைந்த அவரின் கஷ்டங்கள், ஓலை வீடு என அவரின் துக்கமான பக்கங்கள் பற்றி காட்டப்பட்டது. இதனால் பலரும் அவருக்கு உதவ முன் வந்தார்கள். சில பாடங்கள், பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க வாய்ப்பு மேலும் பட வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றது.
பிரபலங்கள் பலரும் youtube சேனல்களை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தாமரையும் youtube சேனலில் தான் புதியதாக கட்டி வரும் வீட்டின் வீடியோவை பதிவிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் அவரின் குடும்பத்தினர் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.