நாட்டில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு pf என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலையில் EPFO என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமம் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் தங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலை படியிலிருந்து 12 சதவீதத்தை இந்தத் திட்டத்திற்கு பங்களிப்பாக வழங்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் நிலையில் தற்போது நடபாண்டுக்கான வட்டி விகிதம் குறித்து இபிஎஃஓ அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட 8.25% வட்டி விகிதம் தான் 2024-25 ஆம் நிதி ஆண்டிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இந்த அமைப்பின் அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.