வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் உஜ்வாலா பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை 500 ரூபாயிலிருந்து 550 ரூபாயாகவும், மற்ற பயனாளர்களுக்கு 803 ரூபாயிலிருந்து 853 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.