
சீனாவில் ஜியோங்சி மாகாணம் நாஞ்சாங் கவுண்டி பகுதியில் திடீரென நிகழ்ந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த 22 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.