பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

“>

 

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ள நிலையில், இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் பொதுமக்களில் திடீர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் மையப்பகுதி எங்கு எனும் தகவலும் ஆய்வில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.