வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்று இரவு 8:30 மணி முதல் 11.30 மணி வரை புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடப்பதால் நாளை வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழக மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை முதல் செங்கல்பட்டு வரை பலத்த காற்று வீசுகிறது.

அதன் பிறகு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு புதுச்சேரியிலும் தேவையில்லாமல் மக்கள் நாளை வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.