
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்குறது 1கோடியே 6 லட்சம் பேரு … 1 கோடியே 6 லட்சம் பேருல… குறைஞ்சது 80, 90 லட்சம் பேர் திமுககாரங்க தான். உங்க கட்சி ஓட்டை தக்க வச்சிக்கிறிங்க.. நான் சொல்லுறது விளங்குதுன்னு நினைக்கிறேன்…..
ஐயாவே ஒரு ஊர்ல கணக்கு எடுக்கும் போது… ஒரு அம்மா உங்க கணவர் என்ன வேலை செய்றாருமா அப்படின்னு கேட்க போய் ? அந்த அம்மாவும் நம்ம கட்சியில தாங்க ஐயா இருக்காரு என் கணவர் அப்படின்னு சொல்லிட்டு… பூனை இதுக்குள்ள தான் இருக்குங்குற மாதிரித்தான் ஆயிடுச்சி… இப்போ காசு வாங்காத மக்கள் என்ன செய்வாங்க சொல்லுங்க ? நம்ம ஊருல எப்படி போராட்டம்நடந்து இருக்குன்னா…..
கேரளாவுல அம்மையார் ஜெயலலிதா இருக்கும் போது 2 தொகுதில போட்டியிட்டாங்க…. இந்த வழக்க முறைப்படி அங்க காசு குடுத்தாங்க… கேரள மக்கள் கட்ட கம்பு, விளக்குமாரை தூக்கி அடிச்சி விரட்டி… எங்க வந்துடா காசு குடுக்குறன்னு அடிச்சிவிரட்டி விட்டாங்க அந்த பக்கம். இந்த பக்கம் நாமக்கல்ல ராசிபுரத்துல மக்கள் தெருல இறங்கி போராடுனாங்க… அந்த தெருல ஓட்டுக்கு காசு கொடுத்துட்டு, எங்க தெருல ஓட்டுக்கு காசு கொடுக்காம போய்ட்டான்னு…
விலைதான் இங்க பிரச்சனை. மக்களுக்கு எது அரசியல் ? எது நம்முடைய அடிப்படை உரிமை ? எதுமே நமக்கு முக்கியம் ? என எதுவுமே கற்பிக்க படல. சும்மா எதோ காசு கொடுக்குறான்… கேட்டா எங்க பெரியம்மாகிட்ட நம்ம காசுத்தானப்பா…. திருட்டு பய திருடிட்டு போனான் இதையாது கொடுக்கட்டும்ன்னு சொல்லுவாங்க என தெரிவித்தார்.