அமெரிக்காவில் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைவிதிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறி வைத்து தொடர் விசாரணைகளை குற்றவியல் நீதிமன்றம் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மதன் யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபரை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்ரேல் அதிபர் வருகைக்குப் பின்னரே இந்த தடை உத்தரவுகள் வெளியாகி உள்ளன.

இந்த அமெரிக்க உத்தரவின் படி குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாக கருதப்படும் அனைவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடைகள் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல. இந்த உத்தரவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தரப்பில் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.