இந்திய ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய 2 வங்கிகளுக்கும் அபராதம் விதித்துள்ளது. அதாவது RBI சட்டபூர்வ ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரத்தின் படி வங்கியின் நிதி நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 1947 ம் ஆண்டு சட்டப்படி, விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் ஆக்ஸிஸ் பேங்க்கு ₹ 1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சில விதிமுறைகளை பின்பற்றவதற்காக ஹெச்டிஎஃப்சி பேங்க்கும் ரு.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதம், அதோடு வங்கிகளால் ஈடுபடுத்தப்படும் மீட்பு முகவர்கள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.