
பி வி எஸ் சி,. ஏஎச் உள்ளிட்ட கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் இன்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பதிவாளர் நரேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய 7 இடங்களிலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இதில் ஐந்தரை ஆண்டுகள் பிவிஎஸ்சி ஏஎச் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 660 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி, ஓசூரில் உள்ள கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளிட்டவைகளில் 4 ஆண்டு பிடெக் இளநிலை உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.
இவற்றில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ வில் கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை படித்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று காலை 10 மணி முதல் ஜூன் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை என்ற https://adm.tanuvas.ac.in/ இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.