
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமா ஹைதரை குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்ட தகவல், பல இடங்களில் உண்மையென பரப்பப்பட்டது.
இருப்பினும், தற்போது இந்த தகவல் தவறானது என காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.அந்த தாக்குதல் நடக்கும் முன்பே குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், எந்தத் தாக்குதலும் நிகழவில்லை என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சீமா ஹைதரின் வளர்ப்பு சகோதரர் மற்றும் வழக்கறிஞர் ஏ.பி. சிங் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். சீமா ஹைதர் சிறு விநாடிகளில் மயிரிழையில் உயிர் தப்பினார் என்றும், அவருக்கு எந்த உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
சீமா ஹைதர், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு தற்போது அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
PUBG விளையாட்டு மூலம் அறிமுகமான இருவரும் காதலித்து இணைந்தனர். இந்தியாவிற்கு வந்து சேர்ந்த பின்னர், சீமா ஹைதர் சனாதனத் தர்மத்தை பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கியுள்ளன. அந்த நிலையில், சுரேந்திரநகரில் இருந்து வந்த ஒரு இளைஞர் சீமாவை தாக்க முயன்றது தொடர்பான தவறான தகவல்கள் பரவியுள்ளன.