வக்பு வாரிய சட்டத்திருத்து மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பாஜக தற்போது அனைத்து மத கோவில் நிலங்கள் மீது அவர்கள் கண் வைத்துள்ளார்கள். இதனை  அவர்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊதுக்குழலான ஆர்கனைசர் பத்திரிக்கையில் வக்பு வாரியத்தை விட கத்தோலிக்க திருச்சபை இந்தியாவில் அதிக நிலங்களை வைத்துள்ளதாக கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. இதை குறிப்பிட்டு பேசிய உத்தவ், பாஜக 45 ஆவது நிறுவன தினத்தை கொண்டாடும் நேரத்தில் ராமரின் வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு கிடையாது. அவர்கள் அதை பகிரங்கப்படுத்தி உள்ளனர். அனைவரும் கண்களை திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.