ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காளிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினிவேன் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்தல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரது உறவினர் நேற்று அருப்புக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி காயத்ரி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்கள் இருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் டி.எஸ்.பி தலைமுடியை இழுத்து தாக்கினார். இதனை  தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, ஒருவர் தலைமறைவான நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் டி.எஸ்.பி-யை தாக்குக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.