UIDAI ஆதார் கார்டு குறித்த புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆதார் கார்டு பயனர்களுக்கு எவ்விதமான சிரமங்களையும் தவிர்க்க பல வசதிகளை வழங்குகிறது. தற்போது நீங்கள் ஆதார் கார்டில் உங்களது குடும்ப உறுப்பினர்களின் முகவரியை ஈஸியாக புதுப்பிக்கலாம். அதன்படி,  ஆதார் கார்டின் உதவியுடன் பிற குடும்ப உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ஆதார் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குடும்பத் தலைவர் ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிக்க முடியும். எனினும் குடும்ப உரிமையாளரின் ஆதார் கார்டு முகவரி புதுப்பிக்கப்படவேண்டும்.

தந்தை, தாய், மகள், மகன், மனைவி ஆகிய குடும்பத்தின் உரிமையாளருடன் நபரின் உறவை பதிவுசெய்ய வேண்டும். சரிபார்ப்புக்கு வீட்டு உரிமையாளரின் பயோமெட்ரிக் கைரேகைகள் தேவைப்படும். அந்த வகையில், ஆதார் சேவகேந்திராவில் முகவரி புதுப்பிக்கும்போது குடும்பத்தின் உரிமையாளர் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

உங்களின் உறவு முறையை நிரூபிக்க பாஸ்போர்ட், ரேஷன் அட்டை (அ) பிடிஎஸ் கார்டு (அ) ஓய்வூதிய அட்டை, திருமணச்சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை எனில், உங்களின் உறவு பற்றி குடும்ப உரிமையாளரால் வழங்கப்பட்ட சுய அறிவிப்பு ஆவணம் போதுமானது ஆகும். இவை 3 மாதங்களுக்கு மட்டும் பொருந்தும். ஆதார் கார்டு முகவரியை புதுப்பிப்பதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்..