DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மை தொழிலாளி. அப்படின்னு சொல்லணும்….  ஏன்னா அந்த அளவிற்கு அவர்  மக்கள் சிந்தனையாகவே இருக்கிறார்…  அதனால் தான் இப்படிப்பட்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் போன்ற கடுமையான  உழைப்பாளிகளை தேர்வு செய்து,  ஒரு மிகப்பெரிய ஒரு படையை தனக்கு பின்னால் திரட்டி இருக்கிறார்.

அதனால் தான் இன்னைக்கு பாருங்க… எவ்வளவு திட்டங்களை கேட்கும்போது….  எனக்குள்ளே மிரட்சியாக  இருக்கிறது.  நான் வரும்போது கவிஞர் பொற்கோ அவர்கள் தான் என்னை அழைச்சிட்டு  வந்திருந்தார். வந்து எனக்கு அமைச்சர் மாசு அவர்களை தெரியும்,   தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களை நல்லா தெரியும்,  பழக்கம் இருக்குது… ஆனால் அவங்களுடைய பழக்கத்தை பற்றியே இவ்வளவு நேரம் பேசுறது…

அவங்களுடைய சாதனைகளை கொஞ்சம் எழுதி கொடுங்கன்னு சொன்னாரு. எழுதி வாங்கிட்டு வந்தா….  இங்க பேசினவங்க எல்லாம் பேசினத பாத்தா….  இந்த சாதனைகள்  கட்டபொம்மனின் ஒரு வசனம் வரும்….  எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது அப்படின்னு….  அந்த மாதிரி கணக்கில் அடங்காத சாதனையாக இருக்கிறது. அந்த சாதனைகள் எல்லாருமே பேசிட்டாங்க.

இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் அவர்களினுடைய சாதனைகளை கொஞ்சமாவது குறிப்பிட்ட சிலது தான் சொல்ல முடியும். ஏன்னா நேரம் இருக்காது…  காலை சிற்றுண்டி… படிக்க வேண்டும்… படிக்க வேண்டும்…. படிக்க வேண்டும்…. கல்வியினால் அறிவு வளர வேண்டும்… அனைவருக்கும் கல்வியும்,  வேலைவாய்ப்பும் சமமாக இருக்க வேண்டும்……

ஆண்களுக்கும்,  பெண்களுக்கும் எல்லா வேலையும்…… எல்லா தொழிலும் சமமாக இருக்க வேண்டும்…..  எல்லா ஜாதிக்காரர்களும் சமமாக இயங்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் உடைய கொள்கை. அந்த கொள்கையின் வழி  வந்த அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்…. அவர்களுடைய புதல்வன்……  நம்முடைய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்…..

அதை மனதில் வைத்துக்கொண்டு காலை சிற்றுண்டி,  மக்களை தேடி மருத்துவம்….  பெண்களுக்கு நல்லா கவனிங்க…. உரிமை தொகைன்னு சொல்றாரு…. உரிமை தொகை….. அது  உங்களுடைய ரைட்…..  அது உதவி தொகை கிடையாது… உதவித்தொகைன்னா….. ஒரு கை இப்படி இருக்கும்…… ஒரு கை அப்படி இருக்கும்….. அப்போ இப்படி இருக்கிற கைக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வரும்…  இப்படி இருக்கிற கைக்கு ஒரு உயர்வு மனப்பான்மை வரும்…  அந்த வேறுபாடு  கை இப்படி இருந்தா வரும்.

அது இருக்கக் கூடாது என்பதற்காக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கு வந்து உரிமை தொகை என  பெயர் வைத்திருக்கிறார்….  அது மாதிரி பெண்களுக்கு கட்டணம் இல்லாத பேருந்து பயணம்… ஏனென்றால் பெண்களுடைய முன்னேற்றம்  ரொம்ப முக்கியம்….  பொதுவா சொல்லுவாங்க…… ஒரு ஆம்பள படிச்சா அவன் மட்டும் படிச்சிருக்கான்…. ஆனால் ஒரு பெண் படித்த அந்த குடும்பமே படித்ததற்கு சமம்….  இன்னைக்கு என்னுடைய மகனும்,  மகளும்  படிக்கும்போது நல்ல மார்க் வாங்கினார்கள் என்றால்,  அதற்கு காரணம் நான் இல்லை. நான் பாட்டுக்கு ஷூட்டிங் போயிடுவேன்…  என்னுடைய மனைவிதான் காரணம். அந்த மாதிரி பெண்கள் படிக்கும் போது அதற்குண்டான மகத்துவமே வேற என பேசினார்.