
மலையாள சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகர் டோவினோ தாமஸ். இவர் நிண்டே மொய்தீன், சார்லி, கப்பி, மின்னல் முரளி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டுள்ளார். இவர் முதலில் சிறிய கதாபாத்திரத்தில் தொடங்கி, துணை வேடம், நகைச்சுவை நடிகர், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியான ஐடென்டி என்ற படம் வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் வெற்றி அடைந்துள்ள நிலையில், நடிகர் டோவினோ தாமஸ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் வாங்கி இருப்பது Land Rover Range Rover Autobiography SUV கார் ஆகும். இதன் விலை சுமார் ரூ.2.60 கோடி என்று கூறப்படுகிறது.