
தென் கொரியா நாட்டில் ஒரு தொண்டு நிறுவனம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் தென் கொரியா போன்ற நாடுகளில் நாய்கள் இறைச்சிகளாக உண்ணப்படுகின்றன. இதனால் நாய்கள் அதிக அளவில் கொல்லப்படுவதால் இதனை தடுக்கும் முயற்சியில் இந்த தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது, நாய்கள் செல்லப் பிராணிகள் அவைகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் கனடாவை சேர்ந்த மிக்செல் ரூடி என்பவர் கலந்து கொண்டார். இவர் சாலையோரங்களில், இறைச்சி கடைகளில் இருந்து மீட்கப்பட்ட 38 நாய் குட்டிகளை ஒரே நேரத்தில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி கூட்டி சென்றுள்ளார். இதற்கு முன்பு 36 நாய்களை நடைப்பயிற்சி கூட்டி சென்ற கின்னஸ் சாதனையை முறியடித்து 38 நாய்களின் நடைப்பயிற்சி கூட்டி சென்றதாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நாய்களை துன்புறுத்தக் கூடாது என்பதே ஆகும்.