வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக இந்த முறை தனித்து களமிறங்கியுள்ளது. அதேபோல் காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி திரினாமுல்  காங்கிரஸ் ஆகியவை முறையே 57,58 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.

அதேபோல் நாகலாந்தில் அகுலூடோ தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் சாகர் திகி பேரவை தொகுதி ஆளும் திரினாமுல்  காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ரதாஸ் சாகா மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஜார்கண்டின் ராம்கர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ மம்தா தேவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மேகாலயத்தில் 12.06 சதவீத வாக்குகளும், நாகலாந்தில் 15.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.