
ஒருநாள் போட்டியில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக சிக்ஸருக்கு அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா..
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இன்னிங்ஸின் போது, ரோஹித் ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்தார். இதன் மூலம் ரோஹித் தனது பெயரில் சிறப்பு சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன், ஷஹீனின் முதல் ஓவரில் எந்த பேட்ஸ்மேனும் சிக்சர் அடிக்கவில்லை. ரோஹித் தனது இன்னிங்ஸை ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் தொடங்கினார் ரோஹித் தனது இன்னிங்ஸின் போது 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.
பாகிஸ்தானின் இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷாஹீன் வீச வந்தார். முதல் 5 பந்துகளில் ஷாஹீன் அற்புதமாக பந்து வீசினாலும், அதில் ரோஹித்தால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை, ஆனால் அதன் பிறகு கடைசி பந்தில் லெக் சைடை நோக்கி அபாரமான சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித், உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார். ஷாஹீனுக்கு எதிராக வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். இருவராலும் அரை சதத்தை சதமாக மாற்ற முடியாமல் போனாலும், இருவரும் பேட் செய்த ஸ்டைல் ரசிகர்களை மட்டுமின்றி உலக கிரிக்கெட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். அப்போது திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை நின்றுவிட்ட நிலையில், மைதானத்தை சரிசெய்யும் பணி நடக்கிறது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடக்கலாம். ஒருவேளை இன்று தொடங்க முடியாத பட்சத்தில் ரிசர்வ் டேவான நாளைய நாள் போட்டிவிட்ட இடத்திலிருந்து தொடங்கும். இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கோலியும் (8 ரன்கள்), ராகுலும் (17 ரன்கள்) களத்தில் உள்ளனர்.
A Rohit Sharma special.
becomes the first batter to hit a six against Shaheen in first over in ODI.pic.twitter.com/oLtzDv0gt1
— Johns. (@CricCrazyJohns) September 10, 2023
https://twitter.com/mufaddal_vodra/status/1700875432772714880