கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், இன்றைக்கு பெரியார் கண்ட கனவு…. அண்ணா கண்ட கனவு…. கலைஞர் எடுத்த முயற்சி…..  இன்னைக்கு நம்முடைய மேயர் தொடங்கி…..  இந்த அரங்கம் முழுமைக்கும் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதற்கான  காரணம்…..  இவ்வளவு பெண்கள்…  அரசியல் கூட்டத்தில் இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது… நாம் கலைஞரை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறோம் ?

இன்னைக்கு கதை, திரைக்கதை, வசனம் என்றைக்கும் கலைஞரை சிகரம் என்று பேசும்… கலைஞர் சிறந்த திரைக்கதையாளர். ஒரு சீனுக்கு  அப்பறோம் அடுத்து எந்த சீன் என்ன வரும் ? அப்படிங்கிறது  மிகச் சரியாக செய்வதற்கான காரணம் என்ன நினைக்கின்றேன் என்றால்,  கலைஞருக்கு இந்த மக்களோடு நேரடியாக இருந்த தொடர்பு.. கலைஞர் பேசிய கூட்டம்.

ஒரு கூட்டம் என்றால் கலைஞர் தான் கடைசியில் பேசுவார். தொடக்க காலத்தில் இருந்து மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார்….  அண்ணா தவிர்த்து வேறு எவரும் மேடைகளில் இல்லை என்றால்,  கலைஞர் அவர் இறுதியாக பேசுவார். அப்போ அதற்கு முன்னாடி சுமாரான பேசுற ஆள்… நல்லா பேசுற ஆளு…. கூட்டத்தை கலைக்கிற ஆள்….. எல்லாரும் பேசி முடித்து தான் கடைசியில் மைக்கு வரும்.

கடைசியில் மைக் வரும் போது…. எது கூட்டமோ, அந்த கூட்டத்தை பற்றிய  எல்லா செய்தியும் சொல்லப்பட்டிருக்கும்…. எல்லாரும் பேசியிருப்பார்கள்…. ஆளுக்கு ஒரு பாயிண்ட் பேசிருவாங்க….  ஆனால் கலைஞர் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட மேடையில் நான் பேச நினைத்ததை அவர் பேசிவிட்டார் என்ற சொல்லை….  சொன்னதே கிடையாது…..  ஏனென்றால் அது  எல்லாம் இல்லாத செய்தியை கலைஞர்  வைத்திருப்பார்…

கலைஞருக்கு அந்த கூட்டத்தின் மனநிலை புரியும்…..  பேசிக்கொண்டிருக்கும் பொழுது லேசா சலசலத்து என்றால், உடனே மடைமாற்றி அந்த கூட்டத்தை தான் பக்கம் திருப்பி மேடையை நோக்கி  வைத்துக் கொள்வார். ஒரு தடவை கூட கலைஞர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டம் கலைந்ததாக சரித்திரமே இல்லை. ஒரு மனிதன் எப்படி  இப்படி பேச முடியும்…. வாழ்நாள் பூரம் பேசிக் கொண்டே இருப்பவர்… தன்  வாழ்நாளில் ஒரு மேடையில் கூட தோற்றுப் போனதில்லை என்று இருக்கிறது அல்லவா…

அப்படி நேரடியாக மக்களின்  மனநிலையை அறிந்ததால் தான் அவருக்கு திரைக்கதை எழுதும் பொழுது….  இந்த சீன்னில் தியேட்டரில் எந்திரித்து விடுவார்கள்… இதுக்கு வெளியே போயிடுவான்…   இது வேண்டாம்….  அப்படின்னு மாற்றுவதற்கான  திறன்….  அவருக்கு வாய்ந்த இடம் திராவிட முன்னேற்ற கழகத்தின் உடைய மேடை… அந்த மேடையோடு இருந்ததினால் அவர் அப்படியே நேரா கொண்டு போய் சினிமாவில் அப்ளை பண்ணுகிறார் என பேசினார்.