இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வெளியிட்ட ரில்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காயல்பட்டினம் பகுதியில் நூர் தீன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது instagram பக்கத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஆஷிப் அலி(19) என்ற வாலிபரும் அரிவாளை வைத்து ரிலீஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையின வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர் .மேலும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.