செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஐயா மோடி திருச்சி வானூர்தி நிலைய விரிவாக்க திறந்து வைக்க வர முடியுதுல்ல. வெள்ளத்தில மிதந்து செத்துப்போனோம்ல நாங்க…. குறைஞ்சது 50, 60 பேர்   தூத்துக்குடியில் செத்தோம்ல….  தூத்துக்குடி என்கின்ற ஒரு மாவட்டமே அழிஞ்சு போச்சு இல்ல. அத  பார்வையிட முடியாதா ? இந்த விரிவாக்கம் யாருக்கானது ? மக்களுக்கானது. மக்கள் செத்துப் போன பிறகு அதை பயன்படுத்த போறது யாரு ?

தொழிற்சாலை வேண்டாம்னு சொல்லல. வளர்ச்சி வேணும்,  தொழிற்சாலை வேணும். எந்த மாதிரியான தொழிற்சாலை என  இருக்குல்ல.  இப்ப நாங்க என்ன சொல்றோம் ? நிலமும்,  வளமும் சார்ந்த தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு வளர்ச்சி என்கிறோம். நீங்க முழுக்க முழுக்க என் நிலத்தில் நச்சு ஆலைகள். சிப்காட் என்று தொழிற்சாலை கொண்டு வரணுன்னுநினைக்கிறீங்க.

என்னுடைய விலை நிலத்தை 3000 ஏக்கர்,  4000 ஏக்கர் பறிக்கிறீங்க. நான் கேட்டனா ? நான் வீதியில் வந்து போராடினேனா? கோயம்பேட்டில் இருக்குற பேருந்து நிலையத்துல வசதி பத்தல. பேருந்து வந்து திரும்ப கஷ்டப்படுது,  நெரிசலா இருக்கு. 400 கோடியில் கிளம்பாக்கத்தில்  கட்டி கொடு என்று கேட்டனா ? யாராவது வீதிக்கு வந்தோமா ?  ஒரு பையன் வந்தனா ?

மீனம்பாக்கம்  வானூர்தி நிலையத்தில் விமானம் பறக்குறதுக்கு கஷ்டப்படுது. நிறைய விமானங்கள் வந்து இறங்கி, ஏறுவதற்கு சிரமப்படுது. அங்கு ஓடு தளம் இல்ல. அதனால நீங்க 5000 ஏக்கரில்  வானூர்தி  நிலையம் கட்டி கொடுங்கன்னு நாங்க போராடினோமா ?   ஏற்கனவே எங்க தாத்தாக்கள் பெயரில் வ.உ.சி பெயரிலும்,  காமராஜர் பெயர்லயும் இருக்குற இயற்கை துறைமுகம் இருக்கு.

இந்த துறைமுகத்தில் ஏற்றுமதி,  இறக்குமதி அதிகமாக இருக்கு. அதனால ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால 6,111 ஏக்கர்ல காட்டுப்பள்ளியில் எங்களுக்கு துறைமுகம் கட்டிக் கொடுங்கள் என்று யாராவது வீதியில்  இறக்கி போராடினோமா ? நாங்க மூடுங்கன்னா திறக்கற…..  திறனா மூடுற……  வேணாம்னா திணிக்கிற…… வேணும்னா செய்ய மாட்ற……  என்னதான் உன் கதை ? என கேள்வி எழுப்பினார்.