
மத்திய அரசு துறையில் நிரப்பப்பட உள்ள 2006 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. Stenographer grade c & d பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் இருக்க வேண்டும். வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப கட்டணம் நூறு ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.