இந்திய விமானப் படைக்கான அக்னி வீரர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று அதாவது மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதில் விருப்பமுள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விமானப்படை கூறியுள்ளது.