
தெலங்கானா மாநிலத்தில் புதிய டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரேவந்த் ரெட்டி, தகுதியான நபர்களுக்கு டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் அனைவரும் தகுதிகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே கார்டுகளை பெறுவார்கள். ரேஷன் கார்டு என்பது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது.
இது மூலமாக அரசின் நிதியுதவிகள் மற்றும் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அரசின் முக்கிய நோக்கம் தகுதியான அனைவருக்கும் இதன் பயன்களை விரைவாக கொண்டு சேர்க்கவேண்டும் என்பதாகும். புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகள் ஆகும், இதில் QR குறியீடுகள் மூலம் பயனாளர்களின் விவரங்கள் மற்றும் தகுதிகள் சரிபார்க்கப்படும்.