
பிரபல முன்னணி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை உண்டு. அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார தரத்தை சமூகத்தில் நிர்ணயிக்கும் ஒரு கருவியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆப்பிள் லிங்க் மற்றும் அதன் இணை நிறுவனமான பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் தயாரிப்புகளின் உற்பத்தி தொழிற்சாலையை 700 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவில் நிறுவ இருப்பதாகவும் அதிலும் கர்நாடக மாநிலத்தில் இதன் தொழிற்சாலை நிறுவப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, ஆப்பிள் போன்கள் விரைவில் கர்நாடகாவில் தயாராக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது . நம் பிரதமர் மோடியின் தலைமையில் 2025 -ஆம் ஆண்டிற்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உழைக்க தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.