உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க, ஆளுநர், மத்திய நிதிநிலை அறிக்கை, திமுகவின் தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதானமாக பதில் அளித்துள்ளார்.

அதன்படி பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து தான் தி.மு.க ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறாரே? என முதல்வரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “தூத்துக்குடியில் போராடியவர்களை துப்பாக்கியால் சுடச் சொல்லி விட்டு டிவியைப் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன் என பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா..? அவர் அப்படித் தான் பேசிட்டு இருப்பார்.

தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் 85 விழுக்காடு நிறைவேற்றி காட்டி உள்ளோம். அதோடு சொல்லாத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். புதுமை பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறாத ஒன்றுதான். ஓரிரு திட்டங்கள் மீதமுள்ளது. அது அனைத்தையும் வரும் ஓராண்டிற்குள் நிறைவேற்றிக் காட்டுவோம். நிச்சயம் நிறைவேற்றி காட்டுவேன்” என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.