
உலகிலேயே சீனா அறிவியல் தொழில்நுட்பத்தில் மிக சிறந்து விளங்கும் நாடாகும். இந்த நிலையில் தற்போது மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்களுடன், ரோபோவையும் பயன்படுத்த தயாராகி வருகிறது. பெய்ஜிங்கின் டாக்ஸி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21 கிலோமீட்டர் கொண்ட மாரத்தான் போட்டியில் 12 ஆயிரம் மனித விளையாட்டு வீரர்களுடன் குறைந்தது 6 மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பெய்ஜிங் பொருளாதார தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் நிர்வாக குழுவின் படி, 20 நிறுவனங்களுக்கு மாரத்தானுக்கு ஏற்ப ரோபோக்களை வடிவமைக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போட்டிக்கான ரோபோக்கள் மனிதர்களைப் போன்ற இருக்க வேண்டும். இரு கால் நடத்தல் அல்லது ஓடுதல் போன்ற செயல்களை செய்யக்கூடிய இயந்திர வடிவமைப்பு ரோபோக்களாக இருக்க வேண்டும். ரோபோக்களின் உயரம் 1.6 அடி முதல் 6.5 அடி உயரம் வரை இருக்கலாம். மேலும் இடுப்பு முதல் பாதம் வரை அவற்றின் அதிகபட்ச நீளம் 0.45 மீட்டர் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ரோபோக்கள் அல்லது முழு தன்னாட்சி இயக்கம் கொண்ட ரோபோக்கள் பந்தயத்திற்கு தகுதியுடைய ரோபோக்கள் ஆகும்.
இதனை இயக்கும் ஆப்ரேட்டர்கள் நடுநிலையில் பேட்டரிகளை மாற்றுதல் போன்றவை இலவசம். சீனா வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் போன்ற சவால்களை சமாளிப்பதற்காக இதுபோன்ற புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிடுவதால் நாட்டின் தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்காக மனித உருவ ரோபோக்களை உருவாக்குவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது.