
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல…. மூன்றை வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க…. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு சொல்றாரு….
தமிழ்நாட்டில் 3000 மடங்கு போதை வஸ்துகள் கூடி விட்டது. மூன்றை வருஷத்துக்கு முன்னாடி டிஜிபி சொன்னது. இந்த ஆட்சி வரும்பொழுது அந்த 3000, 4000 ஆகி இருக்கும். முழு முயற்சி எடுத்து முதல்வர் அதை கட்டுப்படுத்திட்டாங்க என தெரிவித்தார்.
மெச்சுரிட்டி இல்லைன்னு அண்ணாமலை அவரை சொன்னாரா ? அல்ல வேற யாரையும் சொன்னாரா என்று எனக்கு தெரியாது. அவரை சொன்னாரா என எனக்கு தெரில. அவர் தான் வீட்டு வடக்கை எனக்கு மாதம் ஐந்து லட்சம் ரூபாய் என் நண்பர்கள் கொடுக்குறாங்க அப்படின்னுசொன்னாரு…
5 லட்ச ரூபாய் நண்பர்கள் கட்டுறாங்கன்னா…. வருமான வரித்துறை, ஈடி எல்லாம் அங்க போயி 5 லட்ச ரூபாய் எப்படி கொடுக்க ? என சொல்லணும். சட்ட பேரவைசெயலாளர் பதவி நீட்டிப்பு தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு எல்லாம் விருப்பு, வெறுப்பு இருக்கு. சொல்ல தான் செய்வாங்க.
நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் யார் தேவை ? யார் தேவையில்லை ? என்று ஒரு முடிவு பண்ற விஷயத்தை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் விமர்சனம் பண்ண முழு உரிமை இருக்கு. அரசியல்வாதிகள் விமர்சனம் பண்ணி தான் ஆகணும் என தெரிவித்தார்.