
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது.
அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன் யார் யாருடன் பேசி உள்ளார் என்ற அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த போன் ஆதாரங்கள் குறித்து அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, இதுபோன்ற மனுக்களை புறக்கணிக்க வேண்டும்.
இது மாதிரியான வழக்குகளை விசாரணை செய்ய வேண்டும் என்றால் தினமும் 100 வழக்குகள் விசாரணை செய்ய வேண்டி வரும். அரசியல்வாதிகள் ஊடகங்களில் கூறும் கருத்துக்களுக்கெல்லாம் நீதிமன்றங்கள் பதிலளிக்க முடியுமா?.. என நீதிபதி தெரிவித்துள்ளார்.