
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கி மறைந்தும், மறையாமல் இன்றைக்கு மட்டுமல்ல…. இந்த தமிழ் கூறும் நல்லுலகம், இந்த உலகம் இருக்கின்ற வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ் என்பது நிலைத்து நிற்கும். காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும்,
ஏழை – எளிய – நடுத்தர மக்கள் – ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்காக தன்னை முழுமையாக அளவு அர்ப்பணித்துக் கொண்டு, சிறப்பான முறையில் எழுச்சியான ஒரு தமிழகத்தை…. அதுவும் தாழ்ந்து கிடந்த தமிழகத்தை, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது.
எனவே தெற்கு என செல்லும்போது தமிழ்நாடு ஒரு தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக…. 1967 களில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தை அன்றைக்கு வீழ்த்தி, மிகப்பெரிய அளவுக்கு ஒரு ஆட்சியை அன்றைக்கு பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த அந்த நல்லாட்சி நிறைய நல்வாழ்வு திட்டங்கள், அவர் சிந்தனையே பார்த்தீங்கன்னா… ஒரு மாநிலத்தினுடைய ஒரு அதிகாரங்கள், முழுமையான அளவுக்கு மாநிலத்திற்கே இருக்க வேண்டும். அது மத்தியிலே குவிய கூடாது என்ற வகையிலே, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.