
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களுடைய நல மாநாடு கொண்டாடுகின்ற முகமாக நவம்பர் 21 அனைத்து கடலோரப் பகுதிகளிலும், எங்களுடைய துறையின் மூலம், இந்த தினத்தை கொண்டாடுகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளத் துறையினுடைய தலைமை இடத்தில், மீன்வள தினத்தை முன்னிட்டு,
சிறந்த மீன் விற்பனையாளர்கள், சிறந்த மீன் வளர்ப்பாளர்கள், அதுபோல மீன் வளத்தில் பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கின்றவர்களுக்கு பரிசு வழங்குவது, அதுபோல பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டிகள்…..பல்வேறு போட்டிகளை நடத்தி, அவர்களுக்கும் பரிசு வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கியிருக்கின்றார்கள். அந்த உத்தரவை ஏற்று, மீன் வள தினத்தை, கொண்டாடுகின்றோம்.
மீனவர்களுடைய வருமானம் பெருக்குவதற்காக, அவர்களுக்கு என்னென்ன இன்னல்கள் இருக்கின்றதோ, அதை எல்லாம் நீக்க வேண்டும் என்ற வகையிலே, தமிழகத்தினுடைய முதலமைச்சர் உத்தரவு வழங்கி இருக்கின்றார்கள் . அந்த வகையிலே, கடலோர மீனவ கிராமங்களில், மீனவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றதோ, அதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்ற வகையிலே,
தமிழகத்தினுடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கினார்கள். அந்த உத்தரவை ஏற்று, இன்றைக்கு கடலோர பகுதியில் இருக்கின்ற, தூண்டில் வளைவுகள் அமைப்பது, மீன் பிடிப்பதற்கான இடையூறுகளாக இருக்கின்றவற்றை சரி செய்வது… மீனவர்கள் செல்வதற்கான அணுகு சாலைகளை அமைப்பது இது போன்ற பணிகளை செய்து அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலே, தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி இருக்கின்றார்கள். அந்த வகையிலே, தமிழகம் முழுவதும் சிறப்பான பணிகள் இன்றைக்கு நடைபெற்று வருகிறது.