
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெரிய ஆந்தை, ஆற்றின் மேற்பரப்பில் நீந்திச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் முதலில் இது செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது எனக் கருதினர். ஆனால் உண்மையில், இந்த வீடியோ 2014-ம் ஆண்டு மிச்சிகன் ஏரியில் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் ஸ்பிட்சர் எடுத்ததென்பது பின்னர் உறுதியாகியுள்ளது.
View this post on Instagram
இந்த காணொளியில் காணப்படும் ஆந்தை, இரண்டு பெரிக்ரைன் பருந்துகளிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, நீரில் இறங்கி நீந்தியது. பொதுவாக, ஆந்தைகள் நீந்துவது மிகவும் அரிதான ஒரு செயலாகும். ஆனால், இது தப்பிப்பதற்கான தன்னிச்சையான செயலில் ஒரு பகுதியாகும் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோவில் அந்த பறவை, மனிதர்கள் போலவே இரண்டு சிறகுகளை அசைத்து நீர்மேல் நீந்திச் செல்லும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Dodo.com, பிளின்ட் க்ரீக் வனவிலங்கு மறுவாழ்வு மையம் மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, பெரும்பாலான ஆந்தைகள் நீந்தக்கூடியவை என தெரியவந்துள்ளது. ஆனால் அவை நீந்தும் சூழ்நிலைகள் மிகவும் அபூர்வமானவை.
இதனால் தான் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற காணொளிகள், விலங்குகளின் அரிய இயல்புகளையும், இயற்கையின் அதிசயங்களையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.