
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 14ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்ட நீட் முதல் பருவத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த தர்ஷனா பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டின் மாடிக்கு படிக்க சென்ற தர்ஷனா அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.