
மத்திய அரசு குழந்தைகளின் நிதி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், குழந்தைகளின் பெயரில் ஆண்டுக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்தால், 18 வயதுக்கு வந்தவுடன் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார், இது சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் குழந்தைகளுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகவும் செயல்படுகிறது. 18 வயது வரை பெற்றோர்கள் செலுத்திய பின்னர், அந்த குழந்தை வருவாய் ஈட்ட ஆரம்பிக்கும் போது தொடர்ச்சியாக கட்டணம் செலுத்தியால், அவர்களின் ஓய்வுபோக்கில் 12.5 கோடி ரூபாய் வரை கிடைக்கும். இந்த திட்டம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் தொடங்கப்படலாம், மேலும் கம்மான செலவீனத்தில் அதிக பங்களிப்புகளைச் செய்யவும் அனுமதி அளிக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், கணக்குகளை வங்கிகள், அஞ்சலகங்கள், மற்றும் e-NPS இணையதளம் வாயிலாக தொடங்கலாம். குழந்தையின் பெயரில் பாதுகாவலரின் ஆதார், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவையாகின்றன. 18 வயது வரை இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய, அதற்குப் பிறகு மொத்த தொகையின் 25% வரை குழந்தையின் கல்வி, உடல் நலக் குறைபாடு போன்ற தேவைகளுக்காக திரும்பப் பெறலாம்.