செய்தியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இதுவரையிலும் தமிழகத்தில் மீன் குஞ்சு உற்பத்தி செய்வதில்ல வெளி மாநிலத்திலிருந்து குஞ்சு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, குஞ்சுகளை உற்பத்தி செய்வதில் தமிழகம் தன்னிறைவு  அடையும் வேண்டிய வகையிலே அதற்கான பணிகளை எங்களுடைய துறை மூலம் எடுக்கப்பட்டு இருக்கோம்.

அதுபோல, குளங்களில் மீன் விடுவது…. குளங்களில் மட்டுமில்லாமல், இன்றைக்கு காவேரி,   வைகை,  தாமிரபரணி, இந்த ஆற்றுப்பகுதியிலும் மீன் குஞ்சுகளை விட்டு வளர்க்கின்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு,  போன வருடத்திலிருந்து தொடர்ந்து அந்த பணிகளை செய்து வருகிறோம்.

ஆளுநர் அரசு அலுவலராக தூத்துக்குடிக்கு  வரவில்லை, அவர் ஒரு தனியார் நிறுவன அழைப்பின் பேரில் சென்றிருக்கிறார். அதனால நான் இங்கே ( சென்னை ) வந்துள்ளேன். மீனவர்கள் இலங்கை கடற்படைகளால் பிடிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இன்றைக்கு மீனவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.