தமிழக அரசின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் அன்பழகன் ஆவார். இவர் திமுக அரசின் ஆட்சி காலங்களில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணிபுரிந்தவர். இவர் மறைந்த முன்னாள் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது 2024-2025 ஆண்டின் நிதி பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைகளின் முன்னேற்றத்திற்கு ரூபாய் 7500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு பேராசிரியர் அன்பழகனார் முன்னேற்ற திட்டம். இதனை 5 ஆண்டு திட்டமாக தமிழக அரசு அறிவித்தது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக மேல்நிலைப் பள்ளிகளின் சுற்று சுவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் ரூபாய் 745 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரம் நீதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் சுமார் 1000 கோடி ரூபாய் பள்ளி கட்டிட மேம்பாட்டிற்காக பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பிற்காக 116 கோடி 79 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளது.