கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் தடுப்பு மருந்துகள், PPE கருவிகளை தயார் நிலையில் வைக்கவும் பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.