
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாவதால் தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் தொடர்கிறது. சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸுக்கும் மேல் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. அடுத்து வரக்கூடிய ஒரு வாரத்திற்கு வெயிட்டிங் தாக்க மேலும் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அலர்ட் விடுத்துள்ளது.