தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.