
தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகமாகி கொண்டே போகிறது என்று சொல்லலாம். இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தான் அதிகமாக நடக்கிறது. இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அங்கே புகார் அளிக்க வேண்டும்.
அல்லது தேசிய சைபர் கிரைம் தளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கலாம். 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் தான் போலீஸாரால் பண பரிவர்த்தனையை டிராக் செய்ய முடியும். 24 மணி நேரத்திற்கு பிறகு புகார் அளித்தால் சிரமம் ஏற்படும். எனவே குற்றம் நடந்த உடனே https://cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் அளித்து விடவும்.