
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. தெரியாத நம்பர்களிலிருந்து அழைப்பு வந்தால் அதனை நிராகரிப்பது நல்லது. அதன் பிறகு செல்போனுக்கு மெசேஜ் மற்றும் லிங்க் போன்றவைகள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள். அதோடு பகுதி நேர வேலை டிஜிட்டல் அரெஸ்ட் என்றெல்லாம் கூறி பொதுமக்களை பலவிதமாக மோசடி செய்து பொது மக்களின் பணத்தை பறிக்கிறார்கள். இது போன்ற மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில குறிப்பிட்ட செல் போன் நம்பர்களிலிருந்து அழைப்பு வந்தால் அதனை எடுக்கக்கூடாது என்றும் அது மோசடி வேலை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிமுகம் இல்லாத சர்வதேச நம்பர்களில் இருந்து அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் இது போன்ற மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது. அதன்படி +8,+85,+65 என்று தொடங்கும் நம்பர்களிலிருந்து மோசடி அழைப்புகள் வருவது தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற நம்பர்களிலிருந்து அழைப்புகள் வந்தால் சஞ்சார் சாத்தி இணையதளம் அல்லது வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.