
இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாராகி வருகிறது. இந்த ஓடிடி இயங்குதளம் தன் வாடிக்கையாளர்கள் ipl போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கும் நோக்கில் மாதாந்திரம் முதல் வருடாந்திர செல்லுபடியாகும் வரையிலான பல திட்டங்களை பட்டியலிட்டு உள்ளது. ஏர்டெல் வழங்கும் இத்திட்டங்கள் சற்று விலை உயர்வாக இருந்தாலும், Airtel ப்ரீபெய்ட் சிம் இருந்தால் நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை இலவசம் ஆக பெறலாம். சில ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் ஏர்டெல் அதன் பயனாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஏர்டெல் 5G இயக்கப்பட்ட நகரங்களில் வசிக்கும் பயனாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு, SMS மற்றும் 5G வேகத்துடன் டேட்டா பலன்களும் கிடைக்கும்.
ரூ.399 திட்டம்
28 தினங்கள் வேலிடிட்டியுடன் வரும் இத்திட்டம் 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும், அனைத்து உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 SMS, நாளொன்றுக்கு 2.5GP டேட்டா போன்றவற்றை வழங்குகிறது.
ரூ.779 திட்டம்
90 தினங்கள் வேலிடிட்டியுடன் வரும் இத்திட்டம் தினசரி 1.5GP இணைய டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 SMS மற்றும் 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.