
பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜுக்கர் பெர்க். இவருக்கு பிரிசில்லா ஜான் என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் குடும்பத்திற்கு என தனியாக நேரம் ஒதுக்குவது, புதுப்புது கலைகளை கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஆர்வமாக இருந்தார் ஜுக்கர் பெர்க்.
இந்த வகையில் தற்போது அவருடைய மகள்களில் ஒருவருக்கு நகங்களில் வண்ணம் திட்டி மகிழ்ந்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவில் தனது மகளுக்கு அழகாக நகங்களில் வர்ணம் தீட்டி மகிழ்ந்துள்ளார். இதற்கு பெர்கின் மகள், தந்தை தீட்டிய வர்ணம் அழகாக உள்ளது என தனது நகங்களை காட்டியது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ ஒரே நாளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டது.