
ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டுக்கான கூகுளில் அதிகம் தேடப்படும் டாப் 10 விஷயங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் டாப் 10 லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஐபிஎல் டி20, உலக கோப்பை மற்றும் ஒலிம்பிக் 2024 ஆகியவற்றை விட ப்ரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக், மகளிர் பிரிமியர் லீக் மற்றும் துலீப் டிராபி போன்ற உள்நாட்டுப் போட்டிகளை மக்கள் அதிகமாக தேடியுள்ளனர். கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 19 வயது உட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவை அதிகமாக தேடப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், மாநில தேர்தல், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற வார்த்தைகளும் அதிகமாக தேடப்பட்டுள்ளனர். அதோடு வினேஷ் போகத், பீகார் முதல்வர், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் பவன் கல்யாண் போன்ற அரசியல்வாதிகளும் முன்னணியில் உள்ளனர். 2024ல் கூகிளில் அதிகமாக தேடப்பட்ட முதல் டாப் 10 லிஸ்ட் இதோ,
1. இந்தியன் பிரீமியர் லீக்
2. டி20 உலக கோப்பை
3. பாரதிய ஜனதா கட்சி
4. தேர்தல் முடிவுகள் 2024
5. ஒலிம்பிக் 2024
6. அதிக வெப்பம்
7. ரத்தன் டாடா
8. இந்திய தேசிய காங்கிரஸ்
9. ப்ரோ கபடி லீக்
10. இந்தியன் சூப்பர் லீக்